அடுத்த வாரங்களில் சீனியின் விலையை 190 ரூபா, 180 ரூபா என்ற அளவுக்கு குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

 அடுத்த வாரங்களில் சீனியின் விலையை 190 ரூபா, 180 ரூபா என்ற அளவுக்கு குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

 


அடுத்த வாரம் முதல் சீனியின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை

 மேற்கொள்ள உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில், சீனியின் விலையை குறைக்க முடியாது என சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன நேற்று (28) தெரிவித்திருந்தார்.


மேலும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்க அவசியமான சீனி மாத்திரமே கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலையில், தற்போதைய நிலையில், சந்தை நடவடிக்கையின் அடிப்படையில், சீனியின் விலையை உடனடியாக குறைக்க முடியாது என நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.


எனினும், அடுத்துவரும் மூன்று வாரங்களில் சீனியின் விலையை 190 ரூபா, 180 ரூபா என்ற அளவுக்கு குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !