ஊரடங்கு தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட்டதா? அமைச்சர் ரமேஷ் பத்திரண விளக்கம்..!
ஊரடங்கு தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட்டதா? அமைச்சர் ரமேஷ் பத்திரண விளக்கம்..!
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பது அல்லது தளர்த்துவது தொடர்பில் இவ்வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
விசேட வைத்திய நிபுணர்கள் , உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் தேசிய விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்டோரின் ஆலோசனைகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தும் என்றும் இணைபேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
விசேட வைத்திய நிபுணர்கள் , உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் தேசிய விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்டோரின் ஆலோசனைகளுக்கமையவே செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம். அதற்கமைய அரசாங்கம் என்ற ரீதியில் மருத்துவ தரப்பினரின் யோசனைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.
இதே வேளை மக்களின் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கான பொறுப்பும் அரசாங்கத்துக்கு உள்ளது. எனவே சகல தீர்மானங்கள் எடுக்கப்படும் போதும் ஒட்டுமொத்தமாக அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியே தீர்மானங்கள் எடுக்கப்படுகிறது.
ஜனாதிபதி , கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணி மற்றும் சுகாதார தரப்பினர் இவ்வாறான தீர்மானங்களை எடுப்பது குறித்த மதிப்பீடுகளிலேயே அதிக அவதானம் செலுத்துகின்றனர்.
(Metro)
Comments
Post a Comment