சீனி மற்றும் பால்மா கொள்வனவிற்கு முண்டியடிக்கும் மக்கள்
சீனி மற்றும் பால்மா கொள்வனவிற்கு முண்டியடிக்கும் மக்கள்
நாட்டில் பால்மா, சீனி, எரிவாயு உட்பட பல்வேறு அத்தியாவசிய
பொருட்களின் விலை உச்சத்தை தொட்டும், சில அத்தியாவசிய பொருட்கள் சந்தையில் இல்லாத நிலையில் லங்கா சதொசவில் சீனி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இலங்கை உற்பத்தி பால்மா உட்பட சிலவகை பால்மா விற்பனையும், சீனியும் விற்பனை இடம் பெற்றதால் மக்கள் அதிகளவில் லங்கா சதொசவில் குவிந்திருந்தமையை காணக்கூடியதாக உள்ளது.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, வாழைச்சேனை, வாகரை, கல்குடா உட்பட பல்வேறு பிரதேசங்களில் சீனிக்குத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வாழைச்சேனை மாவடிச்சேனை சதொச விற்பனை நிலையத்தில் நுகர்வோரின் நலன் கருதி ஒருவருக்கு ஒரு கிலோ எனும் நிபந்தனைக்கமைய சீனி விற்பனை செய்யப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் ஆர்வத்துடன் விற்பனை நிலையத்தை நோக்கி வந்தாலும் நாட்டின் கொரோனா சூழ்நிலை காரணமாக மக்களை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிக்கல் நிலைகள் உள்ளதை அவதானிக்க முடிகின்றது.
நாட்டின் நடுத்தர வர்க்கம் முதல் உயர்தர வர்க்கம் வரை கொரோனா அலையில் பொருளாதார பாதிப்பை சந்தித்திருக்கும் இந்த சூழ்நிலையில் விலையேற்றம் பாரிய சங்கடத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதுடன், வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள் பலதும் பசியுடன் நாட்களை கடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
- குகதர்ஷன்- மட்டக்களப்பு
Comments
Post a Comment