நாட்டில் விற்கப்படும் ஒக்ஸிமீட்டரில் மோசடி : சந்தையில் போலி ஒக்ஸி மீட்டர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நாட்டில் விற்கப்படும் ஒக்ஸிமீட்டரில் மோசடி : சந்தையில் போலி ஒக்ஸி மீட்டர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஏ.பி.எம்.அஸ்ஹர்
நாட்டில் விற்கப்படும் ஒக்ஸிமீட்டரில்
மோசடி இடம் பெறுவதாகவும், சந்தையில் போலி ஒக்ஸி மீட்டர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பகுதிகளில் ஒக்ஸி மீட்டர் (OXIMETER) மோசடி இடம்பெறுவதாக இலங்கைக்கு ஒக்ஸி மீற்றர் இறக்குமதி செய்யும் பிரதான இறக்குமதியாளரான ஶ்ரீமால் விஜேதுங்க குற்றம் சாட்டியுள்ளார்
நேற்று அவர் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஔடதங்கள் அதிகார சபையின் அனுமதி பெற்ற தமது ஒக்ஸி மீட்டர் இயந்திரத்திரன் விலை 3,990 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தம்மிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் இதே இயந்திரம் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற பகுதிகளில் 6,500, 7,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறுகின்றார்.
அத்துடன், சந்தையில் பெரும்பாலும் போலியான ஒக்ஸிமீட்டர் இயந்திரங்களே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
மனித உடலுக்கு மாத்திரம் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஒக்ஸி மீட்டர் இயந்திரங்கள், பேனையை வைத்தாலும் இயங்குவதாக அவர் கூறினார்
சரியான தரத்தில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸிமீட்டர் இயந்திரங்கள், பேனைகளை வைத்தால் வேலை செய்யாது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
ஒக்ஸி மீட்டரை கொள்வனவு செய்யும் போது, மிகவும் அவதானத்துடன் அவற்றை கொள்வனவு செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொவிட் தொற்று பரவலாக காணப்படுகின்ற இந்த சூழ்நிலையில், ஒவ்வொருவருடைய வீடுகளிலும் ஒக்ஸி மீட்டர் வைத்திருப்பது அவசியமாகும் இந்தப்பின்னணியில், சந்தையில் போலி ஒக்ஸி மீட்டர்கள் உள்ளமை பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment