அசாதாரண விலையேற்றம், கருப்புச் சந்தை மாஃபியா ! இது விற்பதற்கான சந்தர்ப்பம் வாங்குவதற்கு அல்ல, சந்தையில் கேள்வியை அதிகரிக்காதீர்.

  அசாதாரண விலையேற்றம், கருப்புச் சந்தை மாஃபியா ! இது விற்பதற்கான சந்தர்ப்பம் வாங்குவதற்கு அல்ல, சந்தையில் கேள்வியை அதிகரிக்காதீர்.

 


வாகனங்கள் அசாதாரண விலையேற்றம், கருப்புச் சந்தை மாஃபியா !

இது விற்பதற்கான சந்தர்ப்பம் வாங்குவதற்கு அல்ல, சந்தையில் கேள்வியை அதிகரிக்காதீர்.


கொவிட் 19, அசாதாரண சூழ்நிலை, அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையில் பொருட்கள் சேவைகள் வழங்குபவர்கள் சந்தர்ப்பவாத பகற் கொள்ளையில், பதுக்கலில், அசாதாரண இலாபமீட்டலில் குரூரமாக ஈடுபட்டு வருவதை நாம்  அறிகிறோம்.




அந்த வகையில்  இலங்கை வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடி நாணய மதிப்பிறக்கம்  கடன் நெருக்கடி  இறக்குமதி கட்டுப்பாடு என்பவற்றை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி முதலாளி வர்க்கம், இடைத்தரகர்கள், அரசியல் செல்வாக்கு மிக்கோர்  சந்தையில் அரிசி, சீனி, பால்மா உற்பட  அனைத்து பொருட்களின்  விலைகளையும்  பன்மடங்காக அதிகரிக்கச்  செய்யும் கருப்புச் சந்தை வர்த்தக மாஃபியாவில் பகற் கொள்ளை  காட்டு  தர்பாரில்  இருக்கிறார்கள்.


இன்ஷா அல்லாஹ், இந்த நிலமைகள் இவ்வாறே தொடரப்போவதில்லை, நிச்சயமாக  சந்தையில் செயற்கையாக குறிப்பாக இன்டர்நெட்  மற்றும் சமூக ஊடகங்களூடாக ஏற்படுத்தப்பட்டுள்ள சந்தை நிலைமை  சற்று பின்வாங்க ஆரம்பித்துள்ளது.



அந்த வகையில்  வாகன சந்தையிலும்  வர்த்தக கருப்புச்  சந்தை, பதுக்கல் மாஃபியா ஆரம்பித்துள்ளதாக நேர்மையான துறைசார் வர்த்தகர்கள்  தெரிவிக்கிறார்கள்.



புதிய, அல்லது பாவிக்கப்பட்டு மீள் திருத்தப்பட்ட 600 cc  800cc குறைந்த  வலுவுள்ள வாகனங்கள்  200% மேற்பட்ட  சுங்கத் தீர்வை  காரணமாகவே  30 முதல் 40, 50 இட்சங்களாக  இருந்தன  அவற்றின் உண்மை சர்வதேச  சந்தைப் பெறுமதி 10  அல்லது 15 இலட்சங்களை விடவும் குறைவாகும்.


அதே போன்றே 1000cc, 15000 cc 2000cc வலுவுள்ள வாகனங்களும் ஏற்கனவே இலங்கையில் 50, 60, 70, 80  இலட்சங்களாக  அதிக விலையிலேயே விற்கப்பட்டன.


தற்போது மேற்படி  அத்தனை வாகனங்களது விலைகளும்  மூன்று நான்கு  மடங்குகளாக அசாரணமாக  அதிகரிக்கப்பட்டுள்ளன, இந்த போலி  கருப்புச்  சந்தை  மாஃபியாவின்  (இணையதள) செயற்கை விலையேற்றங்களை அஞ்சி அல்லது முதலீட்டு நோக்கங்களுடன்  பலரும்  வாகனங்களை வாங்க முயற்சிப்பது  அறிவுடமையாகாது.


தட்டுப்பாடு  ஏற்படும்  என்ற பீதியை கிளப்பியவுடன்  சந்தையில் ஏனைய பொருட்களுக்கான  கேள்வி  அதிகரிப்பதும், அப்பாவி  மக்கள்  முண்டியடிப்பதும், வரிசைகள்  நீண்டு  கேள்வி அதிகரிப்பதும் யாவரும்  அறிந்த  விடயமாகும்.


தயவு செய்து  உங்கள்  வாழ்நாள்  சேமிப்பை உழைப்பை  இந்த  வர்த்தக மாஃபியா  சூதாட்டத்தில்  இழந்து  விடாதீர்கள், வரதட்சணை  சந்தையில்  அவசரப்படாதீர்கள்.



செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்ட பின்னர் அரசியல்  பண அதிகார  பலம் உள்ளோர்  உள்நாட்டு  வர்த்தகத்தில், ஏற்றுமதி  இறக்குமதி  வர்த்தகத்தில்  சலுகைகளைப் பெற்று பொருட்களின்  விலையை  அதிகரிப்பதும், அவற்றை  இறக்குமதி  செய்து  கொள்ளை  இலாபமீட்டுவதும்  அண்மைக்கால  காட்டுதர்பார்  அராஜகமாக  மாறி வருகிறது.


முதலீட்டு  நோக்கம்  உள்ளவர்கள், தேய்வுப் பெறுமானமுள்ள வாகனங்களில்  தற்போதைய நிலையில்  முதலிடாது, வீடு வளவு, காணி, நிலம் என்பவற்றில்  முதலீடு செய்யுங்கள்.


வெள்ளி தங்கத்தின் விலையில் பித்தளை  இரும்பை  வாங்காதீர்கள், கருப்புச்  சந்தை  மாஃபியாவை  ஊக்குவிக்காதீர்கள்!


*மஸிஹுத்தீன்  இனாமுல்லாஹ்*

✍🏻  28.08.2021


Please subscribe 👇🏼


https://youtu.be/Ok1BYf2-eP0

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !