இனிமேல் இலங்கையில் ஃபைசர் தடுப்பூசியை ஒரேயொரு இடத்தில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும்.

 இனிமேல் இலங்கையில் ஃபைசர் தடுப்பூசியை ஒரேயொரு இடத்தில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும்.

 


கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ்,

 ஃபைசர் தடுப்பூசியை செலுத்தும் முழுமையான அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.


ஃபைசர் மற்றும் அஸ்ட்ராசேனிகா ஆகிய தடுப்பூசிகள் இதற்கு முன்னர், முறையின்றி, வேறு நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.




இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர்களின் விபரங்கள், ஆவணங்களில் பதியாது, மறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



சுகாதார தரப்பினால் புத்தளம் பகுதிக்கு செலுத்தப்பட்ட ஃபைசர் தடுப்பூசி, வெளிநபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளமை அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.



இதையடுத்து, ஃபைசர் தடுப்பூசிகளை செலுத்தும் பொறுப்பு இராணுவத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.


இனிவரும் காலங்களில் ஃபைசர் தடுப்பூசி இராணுவ தலைமையகத்தில், உரிய தரப்பிற்கு செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தடுப்பூசி செலுத்தும் நடைமுறைக்கு அப்பாற் சென்று, தகுதியற்ற எந்தவொரு நபருக்கும் ஃபைசர் தடுப்பூசி செலுத்தப்படாது என இராணுவ தளபதி கூறியுள்ளார்.


இதேவேளை, கொவேக்ஸ் திட்டத்தின் கீழ், அமெரிக்காவினால் இலங்கைக்கு ஒரு லட்சம் ஃபைசர் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டிருந்தன.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !