மனநலம் குன்றிய நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்தை போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு விற்று வந்த சம்பவம்... கண்டி பிரதேசத்தில் பாமசி உரிமையாளர் கைது.
மனநலம் குன்றிய நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்தை போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு விற்று வந்த சம்பவம்... கண்டி பிரதேசத்தில் பாமசி உரிமையாளர் கைது.
மனநலம் குன்றிய
நோயாளர்களுக்கு
வழங்கப்படும் மருந்து,
போதைப்பொருளுக்கு
அடிமையானவர்களுக்கு
வழங்கப்படுவதாகக்
கிடைத்த தகவலுக்கமைய,
கண்டி- அம்பிட்டிய
பிரதேசத்திலுள்ள மருந்து
களஞ்சியலையொன்ற நேற்று (30) சுற்றிவளைக்கப்பட்டது.
மருத்துவர்களின் எவ்விதப் பரிந்துரையுமின்றியே இந்த
மருந்து விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதுடன்,
குறித்த சுற்றிவளைப்பின் போது, 17,000 போதை மாத்திரைகளும்
கர்ப்பத்தைக் கலைப்பதற்கான 1,000 மருந்துகளும்
கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒருவர் சந்தேகத்தின் பேரில்
கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், மருந்தகம்
ஒன்றையும் நடத்திச் செல்பவரென தெரிவித்துள்ள பொலிஸார்,
கைப்பற்றப்பட்ட மருந்துப் பொருள்கள், 1.7 மில்லியன் ரூபாய்
பெறுமதியானது என்றும் தெரிவித்துள்ளனர்.
நாடுபூராகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், போதைப்பொருளுக்கு
அடிமையானவர்கள் போதைப்பொருள்களைப்
பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், மனநலம்
குன்றியவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு பாரிய கிராக்கி
நிலவுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாதாரணமாக சந்தைகளில் 100 ரூபாய்க்கு
விற்கப்படும் இவ்வாறான மருந்துகள் போதைப்பொருள்
அடிமையானவர்களுக்கு மாத்திரம் அதிக விலைக்கு
விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்து.

Comments
Post a Comment