கொவிட்19 சூழ்நிலையில் எமது சிறார்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையிலும் மிகவும் கடினமான ஒரு சவாலை வெற்றிகொண்டுள்ளனர்.

 கொவிட்19 சூழ்நிலையில் எமது சிறார்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையிலும் மிகவும் கடினமான ஒரு சவாலை வெற்றிகொண்டுள்ளனர்.

 



இம்முறை GCE சாதாரன தர பரீட்சை முடிவுகள் வெளிவந்துவிட்டது...!!!

 எனக்கு தெரிந்தவர்கள் பலரும் சிறந்த பெறுபேருகளை பெற்றுள்ளார்கள் , அவர்களது அடைவுகளின் விடயத்தில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தற்போதைய கொவிட்19 சூழ்நிலை காரணமாக பாடசாலைகளுக்கோ, பிரத்தியேக வகுப்புகளுக்கோ செல்ல முடியாத நிலையில் சவால்களை அவர்கள் எப்படிச் சமாளித்தார்கள் என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும். மிகவும் கடினமான ஒரு சவாலை வெற்றிகொண்டுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்!!! 


 நாட்டின் அனைத்து சிறார்களும் அந்த சவாலை நன்றாக எதிர்கொண்டுள்ளனர் என்பதனை வெளியிடப்பட்ட முடிவுகளிலிருந்து காணலாம். நிகழ்நிலை (Online) கல்விக்குத் தேவையான சரியான வசதிகள் இல்லாமல் பல சகோதர சகோதரிகள் இந்த தடையை மிகச் சிரமத்துடன் கடந்து வந்துள்ளனர். அந்த மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் பழைய மாணவர்கள் சங்கம் என்று எல்லோரும் தங்கள் வெற்றியைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறார்கள்.  


இந்த நாட்டில் சவால்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறார்கள் இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். மேலும் எவரேனும் அவர்கள் விரும்பிய முடிவுகளைப் பெறாவிட்டாலும் அவர்கள் தங்களின் அடைவுகளை குறைவாக மதிப்பிடத் தேவையில்லை. வாழ்க்கையில் எல்லாமே ஒரு பரீட்சையால் தீர்மானிக்கப்படுவதில்லை. இந்த முறை உங்களால் முடியாவிட்டால், மீண்டும் முயற்சி செய்யலாம் அல்லது இருக்கின்ற பலதுறைகளில் தேர்வுசெய்து அதில் உங்களின் எதிர்காலத்தை அத்திவாரமிடலாம், அந்த வகையில் உலகை வென்ற பலரை நாம் பார்த்திருக்கிறோம்.  


நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், இந்த சிறார்கள் பிரகாசிக்கக்கூடிய ஒரு நாட்டிற்கு அடித்தாளமிடுவதுதான் தான், இன்ஷா அல்லாஹ் அதுவே எங்கள் நம்பிக்கையாக இருக்கட்டும்.


ஹிதாயத் சத்தார்

முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட அமைப்பாளர்

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !