மஜ்மா நகர் மையவாடி காணியில் தொடர்ந்தும் ஜனாசாக்களை அடக்குவதற்கு சிக்கலா நிலைமையா !.

 மஜ்மா நகர் மையவாடி காணியில் தொடர்ந்தும் ஜனாசாக்களை அடக்குவதற்கு சிக்கலா நிலைமையா !



மஜ்மாநகர் மையவாடி காணி சம்மந்தமாக நேற்று 2021.09.24ம் திகதி 69 அமைப்புக்கள் ஒன்றினைந்து தமது அறிக்கையினை பிரதேச சபை,
பிரதேச செயலகம் மற்றும் பொறுப்புவாய்ந்த அமைப்புக்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  
அந்த வகையில் இவ் 69 அமைப்புக்களில் பெரும்பாலான அமைப்புக்கள் எனப்படுபவை ஒரே பிரதேசத்தைச் சார்ந்ததாக இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த 69 அமைப்புக்கள் என்பது கல்குடா முஸ்லிம் பிரதேசத்தின் ஒட்டு மொத்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதா?
அல்லது குறிப்பிட்ட ஒருசிலரின் இலாபம் கருதியதா?
என்பது சம்மந்தமான கேள்வி எழுந்துள்ளது.
காரணம் மிகவும் வேதனைக்கும், சோதனைக்கும் மத்தியில் எரிக்கப்பட்ட ஜனசாக்களை நிறுத்தி அவற்றை அடக்கம் செய்ய ஜனாதிபதி அனுமதி தந்துள்ள போது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் கல்குடா முஸ்லிம் பிரதேசத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டது,
ஆனால் இன்று அதைத் தடுக்கும் முகமாக முன்னெடுக்கப்படும்
வேலைத்திட்டமானது 
எதற்காகச் செய்யப்படுகிறது என்பது சம்மந்தமான தெளிவு மக்களுக்கு இல்லாமலிருக்கின்றது 
ஆகவே கிண்ணியா பிரதேசத்தில் அடக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் வரை இங்கு அடக்கப்படும் ஜனாசாக்களை நிறுத்துமாறு கூறுவது எந்த விதத்தில் நியாயம்?
அங்கே இடங்கள் எல்லாம் தயார் செய்ததன் பின்னர் இங்கிருந்து அடக்கப்படும் இடம் மாற்றப்படளாம் அதற்கு முன்னர் இவ்வாறு குழம்புவது ஏனெனப் புரியவில்லை?
இதற்கான மக்களின் முடிவு என்ன என்பது தெரிந்து கொள்ள வேண்டிய தேவை 
உள்ளது,
எனவே மூதூர் பிரதேசம் அதில் சரியான இடத்தேர்வு இடம்பெற்று தற்போது அங்கு ஜனாசாக்கள் அடக்கம் செய்யவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிலையில் இங்கே இதை நிறுத்துமாறு கூறுவது இங்குள்ள மக்களிடத்தில் ஒரு குழப்ப நிலைமையை ஏற்படுத்துவதற்காகவா?
அல்லது எதிர்கால அரசியல் இலாபம் கருதியா என்பது புரியவில்லை?
எனவே இந்த விடயத்தில் கல்குடா மக்களின் கைகளிலேயே இந்த தீர்வு விடப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !