பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதியின் விஷேட வேலைத்திட்டம் - 2022"
"பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதியின் விஷேட வேலைத்திட்டம் - 2022"
ஏ.பி.எம்.அஸ்ஹர்
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை
பிரகடனத்தின் கீழ் கிராமிய மட்டத்தில் பொருளாதார புத்தெழுச்சியை ஏற்படுத்தி வறுமையை ஒழிப்பதற்கான விஷேட வேலைத்திட்டம் தேசிய ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் ஜனாதிபதியின் "பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டம் - 2022" தொடர்பான முன்மொழிவுகளை தெளிவுபடுத்தி ஆரம்பித்துவைக்கும் விஷேட கூட்டம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஷ்ஷான் தலைமையில் இன்று சனிக் கிழமை பிற்பகல் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக வன ஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசானாயக்க கலந்து கொண்டார்.
புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டம் - 2022 இன் கீழ் வாழ்வாதார அபிவிருத்தி
பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி
சூழல் மற்றும் பேன்தகு அபிவிருத்தி
சமூக நலனோம்புகை மற்றும் சமூக அபிவிருத்தி
ஆகிய நான்கு பிரதான அபிவிருத்தி கருத்திட்டங்களை மையமாக க்கொண்டு முன்மொழியப்படவுள்ளன.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் நிருவாக உத்தியோகத்தர் ஜே.எம்.ஜெமீல், கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் எச்.பி. ஹெசேரட்ன,
சிரேஷ்ட திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர்
அமைச்சரின் பிரதேச ஒருங்கிணைப்பாளர்.
எம்.ஏ.றிஸ்வான்
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.வை.ஜௌபர், உட்பட கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிவில் சமூக பிரதிநிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment