இறக்குமதி செய்யும் அரிசியை 95 ரூபாவுக்கு வழங்குவோம்.
இறக்குமதி செய்யும் அரிசியை 95 ரூபாவுக்கு வழங்குவோம்.
(ஆர்.யசி)
கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியிலும், நாட்டில் டொலர்
பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையிலும் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை அரசாங்கம் எதிர்கொண்டு வருகின்ற சூழ்நிலையிலும் வியாபார மாபியாகாரர்கள் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் விதமாக விலையேற்றங்களை செய்வதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
நெல் ஆளை உரிமையாளர்கள் அதிகூடிய விலையில் அரிசியை சந்தைக்கு வழங்கினாலும், அரசாங்கம் இறக்குமதி செய்யும் அரிசியை 95 ரூபாவுக்கே வழங்குவோம்.
அப்போது அரிசி உரிமையாளர்கள் என்ன செய்கின்றனர் என்பதையும் பொறுத்திருந்து பாருங்கள் எனவும் அவர் கூறினார்.
நுகர்வோர் அதிகார சபையின் கட்டுப்பாட்டில் இருந்து அரிசி நிர்ணய விலை வியாபாரிகளின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில், இதுவரை காலமாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து இப்போது அரசாங்கம் பின்வாகியுள்ளதற்கான காரணம் குறித்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் வினவிய போது அவர் மேற்கண்டவாறு
Comments
Post a Comment