மதுபான உபசாரமின்றி திருமண வைபவங்களை நடாத்த அனுமதிக்கும் வகையிலான புதிய வழிகாட்டால் தயாராகிறது.
மதுபான உபசாரமின்றி திருமண வைபவங்களை நடாத்த அனுமதிக்கும் வகையிலான புதிய வழிகாட்டால் தயாராகிறது.
சிறிய மற்றும் நடுத்தர அளவு திருமண சேவை வழங்குநர் சங்கம்
மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
நிலவும் கொவிட் தொற்று பரவல் நிலை காரணமாகக் கடுமையான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவு திருமண சேவை வழங்குநர் சங்கத்தினால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது, தற்போதைய சட்டக்கட்டுப்பாடுகளின் கீழ் மீண்டும் திருமண வைபவங்களை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
கொவிட் சுகாதார வழிகாட்டலின் கீழ், அனுமதி வழங்கப்படக்கூடிய குறைந்தபட்ச எண்ணிக்கையிலான விருந்தினர்களைக் கொண்டு திருமண வைபவங்களை நடத்த இருதரப்பும் இணக்கம் தெரிவித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, நடத்தப்படவுள்ள திருமண வைபவ

Comments
Post a Comment