யோஹானியின் சாதனையை அரசாங்கம், பாராட்டி கெளரவிக்கவுள்ளது.
யோஹானியின் சாதனையை அரசாங்கம், பாராட்டி கெளரவிக்கவுள்ளது.
'மெனிக்கே மகே ஹிதே' பாடலின் மூலம்உலகம் முழுதும் பிரபல்யமான இலங்கை பாடகி யோஹானியின் சாதனையை அரசாங்கம் பாராட்டி கெளரவிக்கவுள்ளது.
இந்த பாடல் உலகளாவிய ரீதியில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளளதுடன், தற்சமயம் யூடியூபில் 123 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்த சாதனையை உள்ளூர் ரசிகர்கள் மற்றும் கலைஞர்கள் மட்டும் அல்லாது உலகளாவிய ரீதியிலுள்ள பிரபல்யமான கலைஞர்களும், ரசிகர்கள் ஏனைய முக்கியஸ்தர்களும் பாராட்டி வருகின்றனர்.
இந் நிலையில் இந்த வெற்றிக்காக யோகானியையும் சதீஷனையும் இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்கத் தவறியமை குறித்து சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்,
கொவிட்-19 சூழ்நிலையின் விளைாவினால் எந்த பொது நிகழ்வினையும் நடத்த முடியாது சூழ்நிலை உள்ளது. எவ்வாறாயினும் யோஹானியின் சாதனையை அரசாங்கம் அங்கீகரிக்கும் அதே வேளையில், கொவிட்-19 தடுப்பு நிலைமை மேலும் முன்னேற்றம் கண்டவுடன் முறையான பாராட்டு நிகழ்வு நடைபெறும் என்று கூறினார்.

Comments
Post a Comment