சுகாதார பாதுகாப்பினை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடடிக்கை எடுக்கப்படும்.

 சுகாதார பாதுகாப்பினை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடடிக்கை எடுக்கப்படும்.

 


(இராஜதுரை ஹஷான்)

சுகாதார பாதுகாப்பினை பின்பற்றாத பேருந்து

 சாரதிகள் மற்றும் நடத்துனருக்கு எதிராக கடுமையான நடடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும், சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு ஊரடங்கு தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்படவுள்ள நிலையில் பொது போக்குவரத்து சேவை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.


இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,


நாடு தழுவிய ரீதியில் கடந்த ஒரு மாத காலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் நாளை தளர்த்தப்பட்டவுள்ளது.


இந் நிலையில் நாட்டு மக்கள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றினால் கொவிட் தாக்கத்தை வெற்றிக் கொள்ள முடியும்.


பொது போக்குவரத்து சேவையை வழமை போன்று ஆரம்பித்தால் மீண்டும் கொவிட்-19 வைரஸ் தொற்று தீவிரமடைவதற்கான சாத்தியம் உள்ளது என சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !