வாழைச்சேனையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

 வாழைச்சேனையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது






இன்று 2021-09-27ம் திகதி 11.30 மணியளவில் வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வைத்து 26, 44 வயதுடைய இருவர் ஐந்து கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்கள் இருவரும் வாழைச்சேனை மற்றும் வத்தளைப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.


வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


44 வயதுடைய நபர் கொழும்பு பிரதேசத்திலிருந்து முச்சக்கர வண்டியில் போதைப்பொருளை மறைத்து கொண்டு வந்து பிறைந்துரைச்சேனை பிரதேச வியாபாரிக்கு கொடுக்க முற்றப்பட்ட போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதோடு முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !