அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம் மட்டுமே... பால்மா, சீமெந்து, கோதுமை மா, கேஸ் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

 அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம் மட்டுமே... பால்மா, சீமெந்து, கோதுமை மா, கேஸ் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

 


பால்மா, சீமெந்து, கோதுமை மா மற்றும் எரிவாயு சிலிண்டர்களின்

 விலைகளில் மாற்றம் குறித்து எந்த முடிவும் அமைச்சரவையில் எடுக்கப்படவில்லை என அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


இதேவேளை கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு மத்திய வங்கியிலிருந்து தேவையான நிதியை வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.


அது மாத்தரமின்றி மொத்த மற்றும் சில்லறை விற்பனை ஆகிய இரண்டிற்கும் அரிசி மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை அமைச்சரவை நீக்கியுள்ளது.


இதனால் அரிசிக்கு அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலையை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.


அதேநேரம் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது இருக்க 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.


வாராந்திர அமைச்சரவை கூட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !