இன்று அதிகாலை யானை தாக்கியதில் மீராவோடை ஹாஜியார் வீதியைச் சேர்ந்த முஹம்மது காசிம் என்பவர் உயிர் இழந்தார்.
இன்று அதிகாலை யானை தாக்கியதில் மீராவோடை ஹாஜியார் வீதியைச் சேர்ந்த முஹம்மது காசிம் என்பவர் உயிர் இழந்தார்.
#இன்னாலில்லாஹி #வ #இன்னா #இலைஹி #ராஜிஊன்.
அன்னார்.
ஓட்டமாவடி பிரதேச சபையில் எலெக்ட்ரிசியன் ஆக பணி புரியும் #ஐமீல் மற்றும் மன்பவுல் ஹுதா அரபுக் கல்லூரி மார்க்கக் கல்வி கற்ற #சத்தார் மௌலவி.
#இப்னு இவர்களுடைய மச்சானும் ஆவார்.
விவசாய செய்கையை மேற்கொள்வதற்கு வெள்ளாம சேனை என்றழைக்கப்படும் கார முனை அண்மித்த வயல் பகுதியில் விவசாய நிலம் பண்படுத்தும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு வந்த போது இரவு நேர ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த வரை இன்று இரவு அதிகாலை யானை தாக்கியதில் உயிர் இழந்த நிலையில் அந்த வழியாக ஆடு மேய்க்க சென்ற தமிழ் இன குடும்பத்தினரால் காலை 09 மணி அளவில் அடையாளம் காணப்பட்டு பிரதேச சபை உத்தியோகத்தர் அக்பர் அவர்களுக்கு மேற்கொண்ட அழைப்பின் போது இந்த மரண விடயம் தெரியவந்தது பிரதேச சபைத் தவிசாளர் குடும்ப உறுப்பினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக தவிசாளரின் வேண்டுகோளுக்கிணங்க அனர்த்தம் ஏற்பட்ட இடத்துக்குச் சென்று அங்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் தவிசாளரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது .
துரிதமாக செயற்பட்டு பிரதேச சபைத் தவிசாளர் #நவ்பர் அவர்கள் மரணித்த உடலை மீட்டெடுப்பதற்கு முறையான சட்டரீதியான அனுமதியுடன் பிரதேச சபையின் ஊழியர்கள் ஜனாசா நலம்புரி சங்கம் பிரதித் தலைவர் #நியாஸ் ஹாஜியார் #ஹலால்தீன் ஹாஜியார். ஜனாசா நலம்புரி சங்கம் அங்கத்தவர்களின் ஒத்துழைப்புடன் ஜனாஸா வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது வைத்திய பரிசோதனையின் பின் ஜனாஸா நல்லடக்கம் அடக்கம் செய்வது தொடர்பில் மையவாடிக்கு கொண்டுசெல்லப்படும்.
சிறந்த மனிதநேயம் கொண்ட மறுமை வாழ்விற்கு இறைவனின் நெருக்கத்தை தேடி வாழக்கூடிய நான்கு பிள்ளைகளில் தந்தையாவார்.
அயலவர்களுடன் நோவினை இல்லாத உறவினையும் மார்க்க விடயத்தில் அதிக நேரங்களை ஒதுக்கி வாழ்ந்து வருபவர்களின் இவரும் ஒருவர் அன்னாரின் மறுமை வாழ்விற்கு இறைவனைப் பிரார்த்திப்போம்.
Comments
Post a Comment