நாட்டை கட்டியெழுப்புவதற்காக எங்களுடன் இணையுங்கள்.
நாட்டை கட்டியெழுப்புவதற்காக எங்களுடன் இணையுங்கள்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் எதிர்காலம் என்பது
நாட்டின் எதிர்காலம் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டின் எதிர்காலத்தை நாம் கட்டியெழுப்புவதற்காக, நெறிமுறை சிந்தனைக்குள் சர்வதேச மற்றும் தேசிய ரீதியிலான பிரச்சினைகளை ஆராய்ந்து எங்களால் உருவாக்கப்பட்ட கொள்கை மற்றும் வேலைத்திட்டத்தின் மூலமே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்றார்.
முன்னாள் பிரதமரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகருமான எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 62ஆவது சிரார்த்த தினம் நேற்று (26) அனுஷ்டிக்கப்பட்டது. அந் நிகழ்வில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
எனவே, நாட்டை கட்டியெழுப்புவதற்காக தம்முடன் இணையுமாறு, பண்டாரநாயக்கவின் சமாதியிலிருந்து சகல மக்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
இன்று நாடும் மாறிவிட்டது. உலகமும் மாறிவிட்டது. பண்டாநாயக்கவின் முற்போக்கான கொள்கை வேலைத்திட்டம் என்பன இன்றைய யுகத்துக்கு ஏற்றதைப் போல அன்றே உருவாக்கப்பட்டுள்ளன.
எனவே, புதிய பொருளாதார கொள்கைகள், மக்களின் எதிர்கால நலன்களுக்கான வேலைத்திட்டம், ஊடக சுதந்திரம், மனித உரிமைகள், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி, அனைத்தையம் விரைவாக கொள்கை ரீதியாக செயற்படுத்த முன்னோக்கி செல்ல எதிர்பார்க்கிறோம் என்றார்.

Comments
Post a Comment