போலீசாரை தாக்கிய சம்பவத்தில் 10 பெண்களும், 8 ஆண்களும் கைது.
VIDEO : போலீசாரை தாக்கிய சம்பவத்தில் 10 பெண்களும், 8 ஆண்களும் கைது.
மொரட்டுவை - மாதங்கஹவத்தை பகுதியில் இரண்டு காவல்துறை
உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுள் 10 பெண்களும், 08 ஆண்களும் உள்ளடங்குவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் இரண்டு தரப்பினருக்கு இடையேயான மோதல் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்றிரவு குறித்த காவல்துறை உத்தியோகத்தர்கள் அங்கு சென்றிருந்தனர்.
இதன்போது காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் தலையில் பலத்த காயத்திற்கு உள்ளான ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மற்றுமொருவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
Comments
Post a Comment