சீனி தட்டுப்பாட்டுக்கு தீர்வு வழங்கி கிலோ 122 ரூபாவுக்கு வழங்குவதாக சதோச அறிவிப்பு.
சீனி தட்டுப்பாட்டுக்கு தீர்வு வழங்கி கிலோ 122 ரூபாவுக்கு வழங்குவதாக சதோச அறிவிப்பு.
துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 80 சீனி
கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதன் காரணமாக, எதிர்வரும் நாட்களில் ஒரு கிலோ சீனியை 122 ரூபாவுக்கு பொதுமக்களுக்கு வழங்க முடியுமென லங்கா சதொச தலைவர் ரியல் அத்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது ஒரு கிலோ சீனி 145 ரூபா தொடக்கம் 160 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், விரைவில் சதொச ஊடாக பொதுமக்கள் தட்டுப்பாடின்றி சீனியை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
Comments
Post a Comment