கல்கிசையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 இந்தோனேசிய பெண்கள் உட்பட 6 பேர் கைது.
கல்கிசையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 இந்தோனேசிய பெண்கள் உட்பட 6 பேர் கைது.
கல்கிசை சேரம் மாவத்தை பிரதேசத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5
இந்தோனேசிய பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுள், குறித்த பாலியல் தொழில் விடுதி முகாமையாளரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (29) பிற்பகல் வலான மோசடி ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 51, 35, 31 மற்றும் 28 வயதுடையவர்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிரதான சந்தேகநபரான விடுதி முகாமையாளர், குருநாகலை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேகநபர்கள் இந்தோனேசிய பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரும் இன்று (30) கல்கிசை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Comments
Post a Comment