ஒன்றரை மாதங்களுக்கு முன் கம்பளை வைத்தியசாலையில் காணாமல் போன பொலிஸ் அதிகாரி, வைத்தியசாலை நீர்தாங்கியில் இருந்து சடலமாக மீட்பு.

 ஒன்றரை மாதங்களுக்கு முன் கம்பளை வைத்தியசாலையில் காணாமல் போன பொலிஸ் அதிகாரி, வைத்தியசாலை நீர்தாங்கியில் இருந்து சடலமாக மீட்பு.

 


(எம்.எம்.எம். ரம்ஸீன்)

கம்பளை போதனா வைத்தியசாலையில்

 நெஞ்சு வலியினால் சிகிச்சைக்காக கடந்த மாதம் 8 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன் அன்றைய தினம் காணமல் போயிருந்த நிலையில் 29.10.2021 வைத்தியசாலை நீர்தாங்கியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.




பூண்டுலோய நகரத்தை வசிப்பிடமாக்க கொண்ட எஸ். இளங்கோவன் என்ற இப்பொலிஸ் சார்ஜன் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தார்.




கம்பளை வைத்தியசாலை ஊழியர்கள் நேற்று நீர்தாங்கியை சுத்திகரிக்கச் சென்ற சந்தர்ப்பத்தில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


நீதிவானின் விசாரணையின் பின்னர் சடலம் மீட்கப்பட்டது. அந்த சடலம், காணாமல் போன பொலிஸ் அதிகாரி எஸ். இளகோவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !