நாட்டில் ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அடா்ந்த காட்டை சுத்தம் செய்வது போன்ற செயற்பாடாகும்"

 “நாட்டில் ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அடா்ந்த காட்டை சுத்தம் செய்வது போன்ற செயற்பாடாகும்"

 


தனக்கு கிடைத்த பதவிக்கான கடமைகளை முறையாக முன்னெடுப்பேன்

 என்றும், இது எதிர்பாா்த்த விடயமென்றும் பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளா் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளாா்.


ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராக ஞானசார தேரா் நியமிக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.


“நாட்டில் ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அடா்ந்த காட்டை சுத்தம் செய்வது போன்ற செயற்பாடாகும். தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களுடன் முதலில் கலந்துரையாடியதன் பின்னா் அந்த நடவடிக்கைகள் முடிந்தளவு முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கிறேன். இந்த பதவி தொடர்பில் நான் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். நியமித்த குழுவினருடன் கலந்துரையாடியதன் பின்னா் எதிர்காலத்தில் தெளிவாக அறிவிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளாா்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !