குருணாகல் நோக்கி பயணித்த பஸ், வீதியை விட்டு விலகி வயல் நிலத்தில் கவிழ்ந்தது... பலர் காயம்.
குருணாகல் நோக்கி பயணித்த பஸ், வீதியை விட்டு விலகி வயல் நிலத்தில் கவிழ்ந்தது... பலர் காயம்.
மாத்தளையில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று களுபாலத்திற்கு அருகில்
வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பேருந்து வீதியை விட்டு விலக வயல் நிலம் ஒன்றில் குடைசாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பேருந்தில் 35 பேர் இருந்ததாகவும் அவர்களில் 14 பேர் காயங்களுக்கு உள்ளாகி மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு காயமடைந்தவர்களுள் 3 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment