ஞானசார தேரர் பதவியில் நீடித்தால் நான் பதவி விலகுவேன் ; அலி சப்ரி
ஞானசார தேரர் பதவியில் நீடித்தால் நான் பதவி விலகுவேன் ; அலி சப்ரி
ஞானசார தேரர் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடித்தால் தன்னால் நீதி அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது என நீதி அமைச்சர் அலி சப்ரி திட்டவட்டமாக கூறி உள்ளதாக தேஷய பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
ஞானசார தேரரை ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமித்துள்ளமை தொடர்பில் தன்னிடம் ஆலோசனை பெறவில்லை என கூறி உள்ள அவர் ஞானசார தேரரரின் நியமனம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இதற்கு தீர்வு கிட்டாத பட்சத்தில் அவர் பதவி விலகுவார் என கூறப்படுகிறது.
Comments
Post a Comment