மக்களிற்காக எந்த சவாலையும் ஏற்க தயார் – தகம் சிறிசேன
மக்களிற்காக எந்த சவாலையும் ஏற்க தயார் – தகம் சிறிசேன
மக்கள் நாட்டின் அரசியல் அமைப்பின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கான செயற்திட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடமே உள்ளது என தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல விவகாரங்கள் காணப்படுகின்றன பல இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் அவர்களால் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர் அதற்கான சரியான நீண்டகாலம் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடமும் அதன் தலைமையிடமும் அதற்கான திட்டம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மக்களின் நலன்களிற்காக எந்த சவாலையும் ஏற்க தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment