ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் விவசாயிகளையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் – சஜித் பிரேமதாச
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் விவசாயிகளையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் – சஜித் பிரேமதாச
எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அமையவுள்ள அரசாங்கம் விவசாயிகளையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்தும் என எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டு வரவுள்ள சட்டமூலம் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் சாசன வடிவில் இருக்கும்.
நாங்கள் ஒரு உழவர் சாசனத்தை அறிமுகப்படுத்துவோம், அதன் கீழ் நாங்கள் சட்டத்தை கொண்டு வருவோம், அதன் கீழ் விவசாயிகள் தங்கள் விருப்பப்படி உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கான உரிமைகள் உறுதி செய்யப்படும்.
அரசியலமைப்பினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் பட்டியலில் விவசாயிகளின் உரிமைகளையும் நாங்கள் உள்ளடக்குவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment