NDB இலங்கையில் உள்ளக மற்றும் வெளிப்புற பயன்பாட்டிற்கான டிஜிட்டல் கையொப்பங்களை அறிமுகப்படுத்துகிறது.
NDB இலங்கையில் உள்ளக மற்றும் வெளிப்புற பயன்பாட்டிற்கான டிஜிட்டல் கையொப்பங்களை அறிமுகப்படுத்துகிறது.
ஒவ்வொரு நகர்விலும் புதிய மற்றும் புதுமையான தீர்வுகளை வழங்குவதன் மூலம் தேசிய அபிவிருத்தி வங்கி
PLC டிஜிட்டல் அரங்கிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. டிஜிட்டல் ரீதியாக மேம்படுத்தப்பட்ட வங்கியை நோக்கிய இந்தப் பயணத்தில், உள்ளக மற்றும் வெளிப்புற பயன்பாட்டிற்காக டிஜிட்டல் கையொப்பத்தை செயல்படுத்திய முதல் வங்கியாக NDB விளங்குகிறது.
NDB எப்போதும் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் புரட்சியில் முன்னணியில் உள்ளதுடன் அதன் வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதை மறுவரையறை செய்ய மிகவும் முன்னேற்றகரமான தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை இணைக்கிறது. NDB வங்கி, இலங்கையில் தற்போது டிஜிட்டல் சான்றிதழ்களை வழங்கும் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் அதிகார சபையான LankaSign உடன் கைகோர்த்துள்ளது. இதன் மூலம் ஒரு பயனர் ஆவணங்களில் உடல் கையொப்பமிடும் செயல்முறைக்கு பதிலாக வசதியாகவும், அங்கீகரிக்கப்பட்டதாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் பிழை இல்லாமல் இருக்கவும் ஆவணங்களில் டிஜிட்டல் கையொப்பத்தை இடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒரு டிஜிட்டல் கையொப்பம் கிரிப்டோகிராஃபிக் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன்
உடல் கையொப்பத்தைவிட சிறந்த ஆவணப் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை வழங்குவதுடன் விசேடமாக கையொப்பத்தினை சேதப்படுத்த முடியாதவாறு உறுதியாக்குகிறது. ஒரு பௌதீக ஆவணத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றாலும், ஒரு இலத்திரனியல் ஆவணத்தில் ஒரு டிஜிட்டல் கையொப்பம் இடப்பட்டால், அது சேதப்படுத்த முடியாதவாறு உறுதியாக்கப்படுகிறது. LankaSign டிஜிட்டல் சான்றிதழ்களுடன் ஆவணங்களில் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடுவது அங்கீகாரம், ஒருமைப்பாட்டுடன் மறுதலிக்க முடியாதவாறு அதனை உறுதி செய்கிறது.
இலங்கையில் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட வங்கியாக மாறும் நோக்குடன் 'இந்த செயல்முறையானது உள் மற்றும் வெளிப்புற டிஜிட்டல் மயமாக்கலை ஒரே நேரத்தில் இயக்கி, டிஜிட்டல் தேசத்தை உருவாக்கும் தேசிய நோக்கத்தை ஆதரித்து, முன்னோக்கிச் செல்லும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதியை வழங்குகின்ற அதேநேரம் உள்நாட்டில் காகிதப் பயன்பாடற்ற சூழலை உருவாக்குகிறது' என NDB வங்கியின் பணிப்பாளர்/குழும பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. திமந்த செனவிரத்ன தெரிவித்தார்.
'NDB வங்கியானது வரையறையற்ற வாய்ப்புகளை வழங்கும் பயணத்தில் உள்ளது, அங்கு எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம். இந்த புதிய மேம்பாட்டின் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் நிதி நல்வாழ்வு பாதுகாப்பானதுடன் பல வசதிகள் சேர்க்கப்பட்டதும் பிழைகள் இல்லாததுமாகும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
NDB வாடிக்கையாளர்களுக்கு LankaSign டிஜிட்டல் கையொப்பங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் NDB உடனான கூட்டிணைவு பற்றி LankaClear இன் GM/CEO திரு.சன்ன டி சில்வா பேசுகையில், 'LankaSign டிஜிட்டல் கையொப்பங்கள் பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளன, இருப்பினும் கோவிட் -19 தொற்றுநோய் பரவியதில் இத்தகைய தீர்வின் பயன்பாடு மிக அதிகமாக உணரப்பட்டது. LankaSign டிஜிட்டல் கையொப்பங்கள் பாதுகாப்பானவை, கையொப்பமிடுபவர்கள் பயணம் செய்யும் போது அல்லது தொலைதூரத்தில் உள்ளபோது ஒப்புதல்களைப் பெற உடல் கையொப்பங்களைப் பெறுவதில் உள்ள சிரமங்களுக்கு வசதியான மற்றும் செலவு குறைந்த தீர்வு இதுவாகும். NDB டிஜிட்டல் கையொப்பங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதானது வியாபார செயல்முறைகளை திறமையாகவும், உற்பத்தித் திறனுடனும் தானியக்கமாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகக் கருதப்படலாம். மிக முக்கியமாக, LankaSign இலத்திரனியல் பரிவர்த்தனைகள் சட்டத்துடன் இணங்குகிறது, எனவே, LankaSign டிஜிட்டல் கையொப்பங்களைப் பயன்படுத்தி கையொப்பமிடப்பட்ட ஆவணங்கள் நீதிமன்றங்களில் இலத்திரனியல் ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இது வங்கி மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் நலனைப் பாதுகாக்கும், அதே நேரத்தில் அனைத்து வாடிக்கையாளர் தொடர்புகளிலும் அதிக செயல்திறன் மற்றும் வசதியைக் கொண்டுவரும்.' என்றார்.
வங்கி டிஜிட்டல் தளத்தில் சாதித்த பல முதன்மைகளுடன் சேர்த்து சமீபத்தில் அறிமுகப்படுத்தியதே வீடியோ KYC (vKYC) அடிப்படையிலான கணக்கு ஆரம்பிக்கும் வசதியாகும். vKYC செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிளைக்கு வருகை தராமல், வீட்டிலிருந்தவாறே வசதியாகவும் பாதுகாப்பாகவும் NDB கணக்குகளைத் திறக்க வழிசமைக்கிறது. மேலதிகமாக, வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட கடன் அறிக்க
Comments
Post a Comment