100 நாடுகள் பங்கேற்கும் ஜனநாயக மாநாட்டில் இலங்கைக்கு அழைப்பில்லை – புறக்கணித்தார் பைடன்

 100 நாடுகள் பங்கேற்கும் ஜனநாயக மாநாட்டில் இலங்கைக்கு அழைப்பில்லை – புறக்கணித்தார் பைடன்



100 நாடுகள் பங்கேற்கும் மெய்நிகர் வழி ஜனநாயக மாநாட்டிற்கு இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு விடுக்காததன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இலங்கையை புறக்கணித்துள்ளார்.


ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு இந்தியா பாக்கிஸ்தான் மாலைதீவு நேபாளம் ஆகிய தென்னாசிய நாடுகளிற்கு பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.


எனினும் இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.


சீனா ரஸ்யா ஆகிய நாடுகளையும் அமெரிக்க ஜனாதிபதி புறக்கணித்துள்ளார்.


தாய்வான் பிலிப்பைன்ஸ் மெக்சிக்கோ ஆகிய நாடுகளிற்கும் ஜோபைடன் அழைப்பு விடுத்துள்ளார்.


டிசம்பர் 9 – 10 திகதிகளில் 100 நாடுகள் பங்கேற்கும் மெய்நிகர் வழி ஜனநாயகமாநாடு நடைபெறவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !