அடித்தால் திருப்பித் தாக்கத் தெரியும்; 2/3 பங்கு அதிகாரம் எங்கள் கையில்: மைத்திரி
அடித்தால் திருப்பித் தாக்கத் தெரியும்; 2/3 பங்கு அதிகாரம் எங்கள் கையில்: மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்று(25) பாராளுமன்றத்தில் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அரசாங்கத்தினாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினாலும் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், தம்மைத் தாக்கினால் வேறு எந்த வகையிலும் தாக்குவதற்கு தயார் எனவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு அதிகாரம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளு மன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Comments
Post a Comment