ஒரு கிலோவிற்று சற்று குறைவான அளவிலான கேரள கஞ்சாவுடன் 42 வயதுடைய நபர் கைது
ஒரு கிலோவிற்று சற்று குறைவான அளவிலான கேரள கஞ்சாவுடன் 42 வயதுடைய நபர் கைது
ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் 42 வயதுடைய நபரொருவர் இன்று 2021-11-30ம் திகதி பகல் 12.45 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை, ஹாஜியார் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரையும் கேரள கஞ்சாவையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன், இவருடன் தொடர்புபட்டோர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment