உரிய அதிகாரிகளின் கவணத்திற்கு !!
உரிய அதிகாரிகளின் கவணத்திற்கு !!
மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முருக்கன்தீவு கிராமத்தில் அமைந்துள்ள மட்/ககு/ முறுக்கன்தீவு சிவசக்தி வித்தியாலய மாணவர்கள் பெரும் அசோகரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சாராவெளி பிரம்படிதீவு மற்றும் முறுக்கன்தீவு ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் என பலரும் வீதியில் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. ஆற்றினை அண்டிய பகுதி என்பதால் மழை காலங்களில் பிரதான பாதை வெள்ள நீர் நிறைந்து காப்படுகிறது.
அதுமட்டுமின்றி அங்கு கல்வி கற்கும் உயர்தர மாணவர்கள் நகரப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் சரியான நேரத்துக்கு சமூகமளிக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்குள்ள ஆசிரியர்கள் குறித்த மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறிப்பபிடத்தக்கது.
எனவே இதை கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் மாணவர்களின் நலன் கருதி சரியான தீர்வினைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Comments
Post a Comment