மாவின் விலை அதிகரிப்புக் கேற்ப பாணின் விலை மட்டுமே யாழில் அதிகரிக்கும்

 மாவின் விலை அதிகரிப்புக் கேற்ப பாணின் விலை மட்டுமே யாழில் அதிகரிக்கும்



யாழ். மாவட்டத்தில் பாணின் விலை மட்டுமே 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகின்றது. இதனால், 450 கிராம் எடை கொண்ட ஒரு இறாத்தால் பாணின் விலை 85 ரூபாவாக இருக்கும். ஏனைய வெதுப்பகப் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


யாழ். மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் மற்றும் யாழ். மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்கங்களுடன் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பாண் உற்பத்தி மற்றும் விலை தொடர்பான கலந்துரையா டல் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. 


இந்தக் கலந்துரையாடலில் கோதுமை மாவின் விலை அதிகரித்தமையால் ஒரு இறாத்தல் பாணின் விலையை 85 ரூபாவாக அதிகரிக்க முடிவு எட்டப்பட்டது. ஏனைய வெதுப்பக உற்பத்திப் பொருட் களின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தீர்மானிக்கப்பட்டதாக யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !