அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது ஜனநாயக மாநாட்டிற்கு இலங்கையை அழைக்காதது குறித்து ஆச்சரியமடையவில்லை- ஐ.தே.க

 அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது ஜனநாயக மாநாட்டிற்கு இலங்கையை அழைக்காதது குறித்து ஆச்சரியமடையவில்லை- ஐ.தே.க



அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது ஜனநாயக மாநாட்டிற்கு இலங்கையை அழைக்காதது குறித்து ஆச்சரியமடையவில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.


சமீபத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்களை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஐக்கிய தேசிய கட்சி இதனை தெரிவித்துள்ளது.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலேயோ அல்லது நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையிலேயோ உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு அவ்வேளை ஜனாதிபதியாக பதவிவகித்தவரோ பிரதமராக பதவிவகித்தவரோ அல்லது அமைச்சர்களோ காரணம் என தெரிவிக்கப்படவில்லை என  ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.


உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமற்றவர்களையே ஜனாதிபதி குற்றம்சாட்டுகின்றார், நீதித்துறை குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாதவர்களின் சிவில் உரிமையை  பறிக்கப்போவதாக தெரிவிக்கின்றார் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இது ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகளிற்கு முரணானது என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி இது அரசமைப்பின் சில பிரிவுகளை மீறுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.


அரசமைப்பை பின்பற்றப்போவதாக ஜனாதிபதி செய்துள்ள சத்தியப்பிரமாணாத்திற்கு இது முரணானது எனவும் ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கை இந்த அரசாங்கத்தின் கீழ் அமெரிக்க ஜனாதிபதியின்  ஜனநாயக மாநாட்டிற்கு அழைக்கப்படாதது ஆச்சரியமளிக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !