எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீலாமுனை பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சீலாமுனை,ஆனந்தன் வீதியிலிருந்து வீட்டில் தனிமையிலிருந்த தி.சத்தியராஜன் என்னும் 69 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மண்ணெண்ணை ஊற்றப்பட்டு தீயிட்டு குறித்த நபர் எரிந்துள்ளதாக ஆரம்பக்கப்பட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபருக்கு அருகில் கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அத்துடன் களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்டதுடன், விசாரணைகளை முன்னெடுத்து, பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்தும்படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.
Comments
Post a Comment