அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை பலி...!
அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை பலி...!
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு வயது குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியின் அட்டாளைச்சேனை பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த குழந்தை கெப் வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தினால் படுகாயமடைந்த குழந்தை அக்கரைப்பற்றது ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கெப் வாகன சாரதியின் கவன்குறைவினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சாரதியை கைதுசெய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment