பொருளாதார சிக்கலால் அடகு கடைக்கு சென்ற 600 கிலோ தங்க நகைகள்!

 பொருளாதார சிக்கலால் அடகு கடைக்கு சென்ற 600 கிலோ தங்க நகைகள்!







கொரோனா வைரஸ் பரவல், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக கடந்த சில மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் உள்ள மக்கள் சுமார் 600 கிலோ நகைகளை அடகு மற்றும் விற்பனை செய்துள்ளதாக நகை வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் தொழிலதிபர்கள் மற்றும் வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


கொழும்பு செட்டியார் தெரு மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் உள்ள பல நகைக்கடைகளின் உரிமையாளர்களிடம் இது தொடர்பில் கேட்டறிந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தனர்.


தொடர்ந்த கருத்து வெளியிட்ட அவர்கள், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக புதிய நகைகளை கொள்வனவு செய்வது சுமார் 80 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


தற்போது நகைகளை அடகு வைத்து விற்பனை செய்ய ஆட்கள் வருவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் தொழிலதிபர்கள், இந்நிலையால் தங்களது வருமானம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


பொருளாதாரப் பிரச்சினைகளால் இன்று அதிகமானோர் தங்க முலாம் பூசப்பட்ட நகைகளைப் பயன்படுத்தத் தூண்டுவதாகவும், இதன் காரணமாக தங்களது வருமானம் குறைந்துள்ளதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !