கைது செய்யப்பட்ட நிதர்சனாவின் பெற்றோர், சகோதரி ஆகியோரை பொலிஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

 கைது செய்யப்பட்ட நிதர்சனாவின் பெற்றோர், சகோதரி ஆகியோரை பொலிஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!














மூங்கிலாறு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டிருந்த சிறுமி நிதர்சனாவின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கும் அவரது பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோரை 48 மணி நேரம் பொலிஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


முல்லைத்தீவு மாவட்டத்தின்  மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பில் விசாரணைகளின் போது சிறுமியின் தந்தையார் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் குறித்த சிறுமியின் தாய் தந்தை அவருடைய சகோதரி ஆகியோர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டிருந்தனர்.


இவர்கள் மூவரையும் முல்லைத்தீவு மாவட்ட  நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பொலிசார் இவர்களை 48 மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில் விடயங்களை கேட்டறிந்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா இவர்களை 48 மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளார்.


கடந்த வாரம் 13 ஆம் திகதி முதல் காணாமற் போயிருந்த நிதர்சனா, கொலை செய்யப்பட் நிலையில் 18 ஆம் திகதி சடலமாக அவரது வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தொலைவில் மீட்கப்பட்டிருந்தார்.


கடந்த 13 ஆம் திகதி தனது வீட்டிலிருந்து அக்காவின் வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட நிதர்சனா, பின்னர் காணாமற்போனதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் 15 ம் திகதி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுடசெய்திருந்தனர். ஆனால் இக்கதைகள் அனைத்தும் உருவாக்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !