திருமலை எண்ணெய்க் குதங்கள் இந்தியாவுக்கு! அடுத்த வாரம் அமைச்சரவைப் பத்திரம் !
திருமலை எண்ணெய்க் குதங்கள் இந்தியாவுக்கு! அடுத்த வாரம் அமைச்சரவைப் பத்திரம் !
திருகோணமலை சீனக்குடா பகுதியிலுள்ள எண்ணெய்க்குதங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இந்தியன் ஒயில் கோர்ப்பரேஷனும் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சீனத் துறைமுகப் பகுதியில் உள்ள 98 எண்ணெய் குதங்களை, புதிய நிறுவனம் ஒன்றை அமைத்து 50 ஆண்டுகளுக்கு இந்தியன் ஒயில் கோர்ப்பரேஷனிடம் (ஐஓசி) ஒப்படைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அத்தோடு, 2022 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் போது, இதற்கான, அனுமதியைக் கோரி வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
எணணெய்த் தாங்கியின் பெரும்பகுதியை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் பொறுப்பேற்பதற்கு புதிய நிறுவனம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால், இந்த நிறுவனத்தை ஸ்தாபிப்பதை விரைவுபடுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு ஏற்கனவே எழுத்து மூலம் பணிப்புரை விடுத்துள்ளதாக அறியக் கிடைத்தது.
அதற்கமைய, இந்த எண்ணெய்த் தாங்கிகளை இந்தியன் ஒயில் ஒயில் கோர்ப்பரேஷனிடம் வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் உரிய அமைச்சரான உதய கம்மன்பிலவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அறிய முடிந்தது.
எனினும், அமைச்சரவைப் பத்திரத்தை தயாரித்து அமைச்சரவையில் சமர்ப்பிக்க முன்னர் புதிய நிறுவனமொன்றை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அறியக் கிடைத்தது.
அதன்படி, சீனத்துறைமுகப் பகுதியிலுள்ள 98 எண்ணெய்த் தாங்கிகளையும் ஐம்பது ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு மாற்றப்படும் அபாயமுள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
திருகோணமலை சீனத் துறைமுகப் பகுதியிலுள்ள 99 எண்ணெய் தாங்கிகளில் 14 தாங்கிகள் தற்போது வரை இந்தியன் ஒயில் கோர்ப்பரேஷனிடமேயுள்ளன. அத்தோடு, 24 குதங்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமானதானதாகவும் காணப்படுகின்றன.
எஞ்சிய 61 தாங்கிகளை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய நிறுவனமும் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த அபிவிருத்தித் திட்டத்தில் 51 வீதத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் எஞ்சிய 49 வீதத்தை இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கும் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, இது குறித்து இன்று (27) இலங்கை அரசாங்கத்திற்கும், இந்திய அரசாங்கத்திற்குமிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன் பின்னர், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, அதே வாரத்திற்குள் அனைத்து தகவல்களையும் நாட்டுக்கு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்காக, எணணெய் தாக்கியின் பெரும்பகுதியை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் பொறுப்பேற்பதற் ட்ரிங்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிட்டெட் என்ற புதிய நிறுவனம் ஒன்றையும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, அதன் பின்னரேஅமைச்சரவை அனுமதிக்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த பின்னணியினையடுத்து, இலங்கை கடன் நெருக்கடியில் மீள்வதற்கான நிதியுதவியை இந்தியா விரைவில் வழங்குமென மேலும் அறியமுடிந்தது.
Comments
Post a Comment