அவுஸ்திரேலியாவில் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தபடியே போதைப்பொருள் விற்றதாக நம்பப்படும், முதியவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தபடியே போதைப்பொருள் விற்றதாக நம்பப்படும், முதியவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாகனச் சோதனை நடவடிக்கையின் பாேது, 62 வயதான அந்த முதியவரிடம் மெத்தெம்ஃபெட்டமின், கஞ்சா போன்றவை இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்திருந்தனர். அதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
சிட்னியின் டூரல் பகுதியில் இருந்த அவரது முதியோர் இல்லத்தைச் சோதனையிட்டதில் காவல் துறையினர் மேலும் அதிகமான போதைப்பொருள்களையும் தடி ஒன்றையும் கண்டெடுத்தனர்.
அந்த முதியோர் இல்லத்தில் வசித்து வருவோர், சந்தேகத்துக்குரிய முதியவரின் நடத்தை குறித்தும் அவரைப் பார்க்க வரும் விருந்தினர்கள் குறித்தும் ஏற்கனவே சந்தேகம் தெரிவித்திருந்தனர்.
போதைப்பொருள் விசாரணை ஜூன் மாதம் தொடங்கியது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த 62 வயது முதியவர் மீது, போதைப்பொருள் வைத்திருந்தது, அதை விற்பனை செய்தது, உரிமமின்றி ஆயுதம் வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
Comments
Post a Comment