போதைப்பொருள் மொத்த வியாபாரி பிறந்துரைச்சேனையில் கைது
போதைப்பொருள் மொத்த வியாபாரி பிறந்துரைச்சேனையில் கைது
கொழும்பிலிருந்து போதைப்பொருளைக்கடத்தி வந்து கல்குடாப் பிரதேசத்தில் விற்பனையில் செய்தி வந்த ஓட்டமாவடியைச்சேர்ந்த 40 வயதுடைய வியாபாரியொருவர் இன்று 2021-12-24ம் திகதி மாலை 06.00 மணியளவில் பிறந்துரைச்சேனை-2ம், குறுக்கு வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டார்
இவரிடமிருந்து 30 கிராம் ஐஸ் போதைப்பொருளும் போதைப்பொருள் விற்பனைக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 540,000 ரூபா என கைது செய்யப்பட்ட போதை வியாபாரியே தெரிவித்துள்ளார்.
குறித்த போதைப்பொருள் வியாபாரியைக் கைது செய்வதற்காக மிக நீண்ட நாட்களாக இவரைப் பின்தொடர்ந்து வந்ததுடன், திட்டமிடல்களும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே இன்று வசமாக மாட்டிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்ப்ட்ட நபர் மேலதிக சட்டநடவடிக்கைக்காக வாழைச்சேனைப் பொலிஸாரிடம் ஒபடைக்கப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment