பிரதமரின் நண்பர் ஒருவர் , கட்டணம் ஏதுமின்றி திருப்பதி செல்ல ஜெட் விமானத்தை வழங்கினார். அவரின் பெயர் எனக்குத் தெரியாது.

 பிரதமரின் நண்பர் ஒருவர் , கட்டணம் ஏதுமின்றி திருப்பதி செல்ல ஜெட் விமானத்தை வழங்கினார். அவரின் பெயர் எனக்குத் தெரியாது.



பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,கடந்த 23 ஆம் திகதி புனித

யாத்திரைக்காக இரண்டு நாள் தனிப்பட்ட பயணமாக இந்தியாவின் திருப்பதி சர்வதேச விமான நிலையத்திற்கு நீல நிற எம்ப்ரேயர் லெகசி 600 வணிக ஜெட் விமானத்தில் இருந்து இறங்குவது போன்ற படங்கள் சமூக ஊடகங்களில் பரவத்தொடங்கி சர்ச்சையை ஏற்படுத்தியது


இதனை அடுத்து குறித்த ஜெட் விமானத்தின் உரிமையாளரால் கட்டணம் ஏதுமின்றி பிரதமருக்கு ஜெட் விமானம் வழங்கப்பட்டதாகவும் இந்த ஜெட் விமானத்தை வழங்கியமை நல்லெண்ணத்தின் அடையாளமாகும் எனவும் பிரதமர் அலுவலக தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


“பிரதமரின் நண்பர் ஒருவர், திருப்பதிக்குப் பயணம் செய்ய அவருக்கு அந்த விமானத்தை கட்டணம் இன்றி இலவசமாகக் கொடுத்தார். அந்த நபரின் பெயர் எனக்குத் தெரியாது, ஆனால் அவர் பிரதமரின் நண்பர், இது நல்லெண்ணத்தின் அடையாளமாகும் என்று அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !