இறக்குமதி பால்மா விலை அதிகரித்தது - புதிய விலைகள் இதோ!

 இறக்குமதி பால்மா விலை அதிகரித்தது - புதிய விலைகள் இதோ!



இறக்குமதி பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.


அதன்படி, 400 கிராம் பால் பெக்கெட் ஒன்றின் விலை 60 ரூபாவாவலும், ஒரு கிலோ கிராம் பால் மா பெக்கெட் ஒன்றின் விலையை 150 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


தற்போது 400 கிராம் பால் மா பெக்கெட் 480 ரூபாவுக்கும், 1 கிலோ கிராம் பால் மா பெக்கெட்1,195 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இந்த விலை அதிகரிப்பிற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல் 1 கிலோ கிராம் பால் மா பெக்கெட்டின் புதிய விலை 1,345 அதிகரிக்கப்படவுள்ள நிலையில், 400 கிராம் பால் மா பெக்கெட்டின் புதிய விலை 540 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !