பாடசாலை பொல்லடிக் இசைக் குழு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு
பாடசாலை பொல்லடிக் இசைக் குழு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு
இறக்காமம் பிரதேச சபையின் உப
தவிசாளர் கௌரவ அஷ்-ஷெய்க் ஏ.எல். நௌபர் (ஹாமி) அவர்களினால் கிராமிய கலையான பொல்லடி கலையை பயின்று பிராந்திய நிகழ்வுகளில் அதனை அரங்கேற்றி வரும் கமு/சது/ அமீரலிபுரம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கல்லூரி முதல்வர் எம்.எஸ்.லாஹிர் அவர்களின் பிரதம பங்கேற்புடனும், பொல்லடி குழுவிற்கு பொறுப்பான ஆசிரியர் அஷ்-ஷெய்க் எம்.கே.எம். றுவைஸ் ஆசிரியர், ஏ.எல். முக்ஸித் ஆசிரியர் ஆகியோர் இக்கற்றல் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கிவைத்தனர்.
அருகிவரும் கிராமிய கலை வடிவங்களில் ஒன்றாக பொல்லடிக் கலை காணப்படுகின்றது. குறிப்பாக இறக்காமம் பிரதேசத்தில் தனித்துவமான கலை வடிவங்களில் ஒன்றாக பொல்லடி கலை இருந்துவருகின்றது. இக்கலையை பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கும் பயிற்றுவிக்கும் பணியை கல்லூரி முதல்வர் எம்.எஸ்.லாஹிர் அவர்கள் செயற்படுத்தி வருகின்றமை பாரட்டத்தக்க விடயமாகும்.
கிராமிய கலை வடிவங்களை பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கும் கற்றுக்கொடுக்கும் முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்குடன் இப்பொல்லடி கலையை கற்று அதனை தேசிய மட்டத்தில் அரங்கேற்றிவரும் மாணவர்களுக்கு இக்கற்றல் உபரணங்கள் உப தவிசாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.
Comments
Post a Comment