மீலாதுன் நபி போட்டிகளில் நாடளாவிய வெற்றி பெற்றவர்களுக்கு பணப்பரிசிழ்களும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு.

 மீலாதுன் நபி போட்டிகளில் நாடளாவிய வெற்றி பெற்றவர்களுக்கு பணப்பரிசிழ்களும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு.



முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் கலாச்சாரத் திணைக்களம் ஏற்பாடு செய்த   


தேசிய மீலாதுன் நபி விழாவினை முன்னிட்டு நாடளாவிய  ரீதியில் பாடசாலை மற்றும்  முஸ்லிம் கலைஞா்களுக்கிடையே நடாத்திய மீலாதுன் நபி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பணப்பரிசிழ்களும்  மற்றும்  சான்றிதழ்களும்  வழங்கும் வைபவம் முஸ்லிம் சமப பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளா்  இப்ராஹிம் அன்ஸாா் தலைமையில்  கொழும்பு ஸாஹிரா கல்லுாாியின் கபூர் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை 26 நடைபெற்றது.


இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஊவா மாகாண ஆளுணா் ஏ.ஜே.எம். முஸம்மில் , கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பிணா் காதா் மஸ்தான், மற்றும்  பிரதம மந்திரியின் இணைப்பாளா் பர்சான்,  பிரதம மந்திரியின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான இணைப்பாளா்  கலாநிதி ஹசன் மௌலானா  ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளா்  அஷ்ஷேக் அர்க்கம் நுாா் அமீத் மற்றும் அதிதிகள் பலா் கலந்து கொண்டனா். அத்துடன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளது பெற்றோா்களும் கலாச்சாரத்  திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனா்.


 இந் நிகழ்வில் பேச்சு, குர்ஆண் மனனம், கவிதை, கட்டுரைப் பேச்சு போட்டிகள் என மும் மொழிகளிலும் நடைபெற்றது.  முதலாம் , இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றவா்களையே கொழும்புக்கு அழைக்கப்பட்டு அவா்களுக்கு  முறையே 10ஆயிரம், 7500 ரூபா .5ஆயிரம் ருபா பணப்பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !