கல்குடாவுக்கு கொண்டு வரப்படவிருந்த ஐஸ் போதைப்பொருளுடன் நாவற்குடாவைச்சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி கைது
கல்குடாவுக்கு கொண்டு வரப்படவிருந்த ஐஸ் போதைப்பொருளுடன் நாவற்குடாவைச்சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி கைது
மட்டக்களப்பிலிருந்து கல்குடாவுக்கு கொண்டு வரப்படவிருந்த ஐஸ் போதைப்பொருளுடன் நாவற்குடாவைச்சேர்ந்த 45 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியொருவர் நேற்று 2021-12-26ம் ஞாயிற்றுக்கிழமை மாலை 07.05 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, நாவற்குடா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து 28 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய பெரிய நீலாவணை (மருதமுனை) விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியிடம் விஷேட அதிரடிப்படையினர் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீண்டநேர விசாரணையில் பல முக்கிய தகவல்களைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைக்காக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment