80 இலட்சம் பெறுமதியான இரண்டு கஜமுத்துக்களுடன் இருவர் கைது

 

80 இலட்சம் பெறுமதியான இரண்டு கஜமுத்துக்களுடன் இருவர் கைது - மட்டக்களப்பில் சம்பவம்



80 இலட்சம் ரூபாய் பெறூமதியான இரண்டு கஜமுத்துக்களுடன் மட்டக்களப்பு புல்லுமலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் எஸ்.சுரேஸ்குமார் தெரிவித்தார்.

நேற்று மாலை 7.00 மணியளவில் மகோயாவிலிருந்து புல்லுமலை பன்சலைக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் குறித்த கஜமுத்துக்களை கடத்திக்கொண்டு மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த வேளை வவுணதீவு விசேட அதிரடிப் படையினரும் கல்லடி கடற்படை வீரர்களும் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து 30.8 கிராம் மற்றும் 4.5 கிராம் எடையுள்ள இரு கஜமுத்துக்களும் கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவர்கள் ஏறாவூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !