மின்சார உற்பத்திக்கு தேவையான டீசல் இன்றுடன் முடிவடைகிறது - மின்சார சபை

 

மின்சார உற்பத்திக்கு தேவையான டீசல் இன்றுடன் முடிவடைகிறது - மின்சார சபை



மின்சார உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் எண்ணெய், இன்றைய தினத்திற்கு (26) மாத்திரமே போதுமானதாக உள்ளதென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்திக்காக களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு வழங்கப்பட்ட டீசல் கையிருப்பு இன்றுடன் நிறைவடைவதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார்.

சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக மிதக்கும் மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் இன்றைய தினத்திற்கு மாத்திரமே போதுமானது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

முற்பதிவு செய்யப்பட்ட டீசல் மற்றும் எண்ணெய் இன்றைய தினம் (26) கிடைக்காவிடின், மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியமில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !