விபத்தில் முதியவர் பலி!

 

விபத்தில் முதியவர் பலி : மாவடிவேம்பில் சம்பவம்!



மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்திவெளி பிரதேசத்தைச் சேர்நத் ஜந்து பிள்ளைகளின் தந்தையான செல்லப்பா சண்முகம் (75) வதுடையவர் நேற்று மாலை (28) அன்று விபத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று தனது வீட்டிலிருந்து மரண வீடொன்றிக்கு சென்று திரும்பியவேளை மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ஆடை தொழிச்சாலையில் பணிபுரியும் நபர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் மோதியதில் குறித்த நபர் சம்ப இடத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சம்ப இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். சந்திவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !