வெல்லாவெளி, விவேகானந்தபுரத்தில் கைக்குண்டுகள் மீட்பு !

 வெல்லாவெளி, விவேகானந்தபுரத்தில் கைக்குண்டுகள் மீட்பு 



களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி, விவேகானந்தபுரத்தில் வெடிக்காத நிலையில் இரு கைக்குண்டுகள் இரண்டு இன்று 25.01.2022ம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. 

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய களுவாஞ்சிக்குடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இக்குண்டுகள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன. 

மீட்கப்பட்ட கைக்குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து பொதுமக்களுக்கு அபாயத்தை உண்டாக்கக்கூடிய வெடிபொருட்களை தேடிக்கண்டு பிடித்து மீட்டு, செயலிழக்கச் செய்து மக்களை பாதுகாக்கும் பணியினை சிறப்பாக முன்னெடுத்து வருவது வரவேற்கத்தக்க விடயமாகும்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !